Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்….! ”10 லட்சத்தை தாண்டிய கொரோனா” பயத்தில் உலக நாடுகள் …!!

உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரஸ் பாதிப்பில் கடுமையான துயரை சந்தித்து வருகின்றது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

 

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 3,062,054 பேர் பாதித்துள்ளனர். 211,433 பேர் உயிரிழந்த நிலையில், 921,166 பேர் குணமடைந்துள்ளனர். 1,929,455 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 56,293 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடும் விளைவுகளை சந்தித்துள்ளது.

 

தினமும் கொத்துக்கொத்தாக மரணம் ஏற்பட்டு வருவதால் சொல்ல முடியாத துயரை அமெரிக்கா சந்தித்து வருகின்றது. உலக நாடுகளுக்கு சீனா அனுப்பிய கொரோனா மருந்து, சிகிச்சை பொருட்களையெல்லாம் தங்கள் நாட்டிற்கு மிரட்டி திருப்பி விட்ட அமெரிக்காவில் மரணத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அதிபர் ட்ரம்ப் கொரோனாவில் இறுதி கட்டத்தை கடந்து விட்டோம், இனி கவலை இல்லை என்றெல்லாம் தெரிவித்தார். ஆனால் அமெரிக்காவால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

நேற்று ஒரே நாளில் புதிதாக 22,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,010,123ஆக அதிகரித்துள்ளது. அதே போல நேற்று ஒரே நாளில் 1,383 பேர் கொரோனாவால் இறந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 56,796 ஆக உயர்ந்துள்ளது. அதிகப்படியான பாதிப்பாக அங்குள்ள நியூயார்க்கில் 298,004 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 22,623 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக : 

நியூ ஜெர்சியில் பாதிப்பு – 1,11,188, உயிரிழப்பு – 6,044

மாசாச்சூசெட்ட்ஸ் பாதிப்பு – 56,462, உயிரிழப்பு 3,003

லல்லினோயிஸ் பாதிப்பு – 45,883, உயிரிழப்பு – 1,983

கலிபோர்னியா பாதிப்பு – 45,006, உயிரிழப்பு – 1,776

பென்சில்வேனியா பாதிப்பு – 43,155, உயிரிழப்பு 1860

Categories

Tech |