அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன் என்று புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அன்றாட மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பல மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடை பயணமாகவே அவரவர் மாநிலத்துக்கு வந்த நிகழ்வும் நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்துக்கு வெளிமாநிலத்தில் இருந்து நடைபயணமாக வரும் வருபவர்களை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனுமதிக்க கூடாது என்று அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இது பல்வேறு வகையில் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து வெளிமாநிலத்தில் இருந்து நடைபயணமாக வருபவரை அனுமதிக்காவிட்டால் பதவியில் இருந்து விலகுவேன் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.