Categories
அரசியல்

தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது…..!!

நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்  இன்று தொடங்கியது .

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது  . வேட்பு மனுத்தாக்கலானது மாலை 3 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது .இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடியவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது .வேட்புமனுத் தாக்கல் செய்யக் கூடியவருடன் நான்கு பேர் மட்டுமே அனுமதி என்றும் , வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது  3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for election commission of india

மேலும் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது  எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாதவாறு இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்துக்கு போட்டியிட கூடியவர்கள் வேட்பாளர்கள் 25,000 ரூபாய் வேட்புமனு கட்டணமாக  செலுத்த வேண்டுமென்றும் ,SC/ST வேட்பாளர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 12,500 ரூபாய் செலுத்த வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது . இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கல் வருகின்ற 26_ஆம் தேதி வரை நடைபெறுகின்றது .சனி மற்றும் ஞாயிறு கிழமைகள் விடுமுறை தினம் என்பதால் இந்த இரண்டு நாட்களில் இந்த வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது . அதேபோல 28ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை திரும்பப் பெறக் கூடிய நாளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது .

Categories

Tech |