Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

தரம் தான் முக்கியம்….! ”நீங்க சொல்லுறது ஏமாற்றமா இருக்கு” சீனா நிறுவனம் விளக்கம் ….!!

ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகள் தரமற்றவை என்ற புகாருக்கு சீன நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனா பரிசோதனையை எந்த அளவிற்கு அதிகப்படுத்துகின்றோமோ அந்த அளவுக்கு கொரோனவை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து மாநில அரசுகள் அதிகமான சோதனைகளை நடத்தி வருகின்றன. இதற்கு உதவிகரமாக இருக்கும் வகையில் மத்திய அரசாங்கமும் விரைவாக பரிசோதிக்கும் ரேப்பிட் டெஸ்ட் கருவிகளை சீன நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்தது. ஆனால் ரேபிட் கருவிகள் சரியான முறையில் பரிசோதனை முடிவுகளை காட்டவில்லை, தவறாக காட்டுகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ராஜஸ்தான் மாநிலம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை பயன்படுத்தப் போவதில்லை என்று அறிவித்தன. இந்நிலையில்தான் இந்திய மருத்துவ கவுன்சில் ரேபிட் டெஸ்ட் கிட்களை எந்த மாநிலமும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியது. இதையடுத்து இந்திய அரசின் புகாருக்கு சீனத் தயாரிப்பு நிறுவனம் பதிலளித்துள்ளது.

அதில், எங்கள் நிறுவன ரேப்பிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர் கூறியிருப்பது ஏமாற்றமளிக்கிறது என்று ஐ.சி.எம்.ஆர் அறிக்கைக்கு ரேபிட் டெஸ்ட் கருவிகளைத் தயாரிக்கும் Wondfo Biotech  நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் தரம் மட்டுமே முதன்மையான நோக்கமாக செயல்பட்டு வருகின்றோம். கொரோனா தொற்றின் பாதிப்புக்கு ஏற்ப சோதனை முறைகள் மாறுபடும். ரேபிட் டெஸ்ட் கருவிகள் மீதான புகார் குறித்து விசாரித்து வருகிறோம் என்று சீனாவின் Wondfo Biotech நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |