Categories
உலக செய்திகள்

கிருமிநாசினியை குடிக்கும் மக்கள்… “நீங்க குடிச்சீங்கன்னா நா பொறுப்பு கிடையாது”… கைவிரிக்கும் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிருமி நாசினியை முறையற்ற முறையில் பயன்படுத்துபவர்களுக்கு தான் பொறுப்பு இல்லை என்று கூறி சமாளித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ட்ரம்ப்  தலைமையிலான அரசு என்ன செய்வது என்றே திணறி வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று கொரோனா  வைரஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது,  கொரோனா வைரசை குணப்படுத்துவதற்கான வழியாக லைசால் மற்றும் டெட்டால் ஆகிய கிருமி நாசினிகளை உடலுக்குள் செலுத்தி பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயுமாறு அதிபர் டிரம்ப் மருத்துவரிடம் கேட்டார்.. பின்னர் அவர் கருத்துக்கள் ‘கிண்டல்’ என்று கூறினார்.

அவர் பேசியதை தொடர்ந்து, அமெரிக்காவில் கொரோனா மருந்தாக கிருமிநாசினியை  பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றதையடுத்து, இதுகுறித்து அதிபர் டிரம்ப்பிடம் கேட்டபோது ஏன் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று கூறினார். மேலும் இதற்கு அவர் பொறுப்பேற்பாரா என்று கேட்ட போது, முறையற்ற முறையில் கிருமி நாசினிகளை பயன்படுத்துபவர்களுக்கு நான் பொறுப்பு இல்லை என்றும் பதில் அளித்தார்.

இதற்கு முன்னதாக மேரிலாந்து மாகாணம் முழுவதிலும் இருந்து கிருமி நாசினிகளை எதிர்ப்பது அல்லது கிருமி நாசினிகளை உட்கொள்வது ஒரு சிறந்த வழியாகுமா என்று நூற்றுக்கணக்கான மக்கள் போன் செய்து தன்னிடம் கேட்டதாக, அம்மாநில கவர்னர் லாரி ஹோகன் கூறினார்.

உலக அளவில் மிரட்டி வரும் கொரோனா வைரசுக்கு மத்தியில் மக்கள் உண்மையிலேயே பயப்படும் நிலையில், இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு களில் உண்மைகளையே  நாங்கள் பெருகிறோம். அமெரிக்க அதிபர் இவ்வாறு கூறியது மிகவும் மோசமானது என்று தான் நினைக்கிறன் என்று கவர்னர் லாரி  கூறினார்.

Categories

Tech |