Categories
சென்னை

மாநகராட்சி நிபந்தனையை ஏற்க மறுப்பு…. கோயம்பேடு மார்க்கெட்டில் 1,500 கடைகளுக்கு விடுமுறை!

கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கிவரும் 1,500 கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சிறு மற்றும் மொத்த வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். அரசிடம் இருந்து அடுத்த அறிவிப்பை வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என நேற்று காவல் ஆணையர் தெரிவித்தார்.

இதனிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என கோயம்பேடு மார்க்கெட்டை 3ஆக பிரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோயம்பேடு, கேளம்பாக்கம் மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சந்தையை அமைக்க வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கை ஏற்கவில்லையென்றால் கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு என தகவல்கள் வெளியானது.

இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனால் இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. கோயம்பேடு வியாபாரிகள் சங்க தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில் மாநகராட்சி நிபந்தனையை ஏற்க சிறுவியாபாரிகள் மறுப்பு தெரிவித்து கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கிவரும் 1,500 கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் நேற்றுவரை வியாபாரம் செய்த பூக்கடைக்காரருக்கு இன்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |