Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா உறுதி.. பிற காவலர்களுக்கும் பரிசோதனை..!

சென்னையில் மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்த 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கம் காவல்நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர், முதல்நிலை காவலராகவும், மற்றொருவர் உளவுத்துறை முதல்நிலை காவலராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் காவல் நிலைய கட்டிடத்தில் உதவி ஆணையர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, காவல்நிலைய வளாகத்திற்கு உள்ளே செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா தோற்று உறுதியாகியுள்ள 2 பேரின் குடும்பத்தினரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அதேபோல, இரு காவலர்களும் இதுவரை சென்ற இடங்கள் குறித்து பட்டியலிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே, ஆலந்தூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவருக்கு நோய் தொற்று எவ்வாறு பரவியது என்ற காரணம் தெரியவில்லை.

Categories

Tech |