வழிபட்டு தளங்களை தேர்தல் பரப்புரை செய்ய பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளை வலியுறுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடத்தைப் பெறுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்துள்ளது . இந்நிலையில் தேர்தல் ஆணையமும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது .இந்நிலையில் கோவில் மற்றும் வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பரப்புரைக்காக பயன்படுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது .
இந்நிலையில் மசூதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வது சிறப்பு அதிகாரிகள் மூலம் கண்காணிக்க வேண்டும் என பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது . இதையடுத்து தேர்தல் ஆணையம் பல்வேறு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் அமையும் என்பதால் வழிபட்டு தளங்களில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வழிபட்டு தளங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவில் பெயரை பயன்படுத்தி வாக்கு வேட்டை நடத்த கூடாது என்று ஏற்கனவே கேரள தேர்தல் தலைமை அதிகாரி எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது .