Categories
தேசிய செய்திகள்

டெல்லி நிதி ஆயோக் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா… அலுவலகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்..!

டெல்லியில் நிதி ஆயோக் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகிறது.

டெல்லியில் இதுவரை 3,108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் 190 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,108 ஆக அதிகரித்துள்ளது.

அதில் 877 நோயாளிகள் இதுவரை குணப்படுத்தப்பட்டுள்ளனர். 11 பேர் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, இறப்பு எண்ணிக்கை 54 ஆக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் டெல்லி 3வது இடத்தில் உள்ளது. டெல்லியில் கொரோனாவின் இரட்டிப்பு விகிதம் 13 நாட்களாக உள்ளது.

மேலும், கடந்த வாரம் விமான போக்குவரத்துத்துறை ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அலுவலகம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த நிலையில், நிதி ஆயோக் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழியருடன் தொடர்பில் இருந்த அனைத்து அதிகாரிகளையும் சுய தனிமைபடுத்திக்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |