வடகொரியாவுடன் இருக்கும் பிரச்சனையை யதார்த்தமான முடித்துக் கொள்ள தயார் என தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்
வட கொரியாவுடன் இருக்கும் பிரச்சனையை யதார்த்தமான முறையில் நடைமுறைக்கு உகந்த வகையில் தீர்ப்பதற்கு தயார் என தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மூத்த ஆலோசகர்களுடன் நடந்தப்பட்ட கூட்டத்தில் அதிபர் மூன் ஜே இன் பேசுகையில் “பன்முன்ஜோம் அமைதி ஒப்பந்தத்தை இரண்டு நாடுகளும் கடைப்பிடிக்காமல் போனதற்கு சர்வதேச நாடுகள் வட கொரியா மீது விதித்த தடைகள் தான் முக்கிய காரணம். ஆனால் இந்த சூழல் சரியாகும் வரை நாம் காத்திருக்க முடியாது.
அதற்கு பதிலாக தடைகள் இருக்கும் பொழுதே எதார்த்தமான நடைமுறைக்கு ஏற்ற வழியில் சிறுசிறு முன்னேற்பாடுகளுடன் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று கால்நடைகளுக்கு வரும் தொற்றுநோய். எல்லைப்பகுதிகளில் நிகழ்ந்துவரும் பேரிடர்கள், பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளை இரண்டு நாடுகளும் சேர்ந்து எதிர்கொள்ளலாம். இரண்டு நாடுகளுக்கும் இடையே தேவைப்படும் ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை தென்கொரியா மேற்கொள்ளும்” என கூறினார்.