Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி பேசியதில் என்ன தவறு…! ஜோவுக்கு ஆதரவாக லட்சுமி ராமகிருஷ்ணன்…!!

ஜோதிகா பேசியது மிகவும் சரியான ஒன்று. அவர் பேசியதில் எந்த தவறுமில்லை என இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நடிகை ஜோதிகா சமீபத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த கருத்திற்கு ஆதரவும் கிடைத்தது. அவர் வெளியிட்ட கருத்து என்னவென்றால் கோவிலுக்கு செலவிடும் பணத்தை, பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என்று கூறினார்.

இந்த கருத்து தான் பலரிடையே சர்ச்சையை கிளப்பியது, ஆனால்  ஜோதிகாவிற்க்கு எதிராக நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்ரி ரகுராம் போன்றோர் கண்டனம் தெரிவித்தனர்.  இந்த நிலையில் அவரது இந்த கருத்துக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவாக தற்போது பேசியுள்ளார்.

நடிகை லட்சுமி ராமகிருஷ்னன் என்ன கூறினார்.?

ஜோதிகாவை ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள்? என்று எனக்கு புரியவில்லை. நான் அவருடையை பேச்சை முழுமையாக கேட்டேன். அதில் யாரையும் கஷ்ட்டப்படுத்தும் வகையில் அவர் தவறாக ஒன்றும் பேசவில்லை. அவர் கூறியது முழுக்க முழுக்க உண்மையாகும். இந்த கொரோனா வைரசால் ஏற்படும் துயரங்கள் ஏராளம். ஆனாலும் இன்னும் அது கற்றுக்கொடுத்த பாடத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

சில பேர் மதத்தை பற்றி அரசியல் செய்யும் செயல் மிக மோசமானது. ஜோதிகா எந்த மதத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை. ஒரு சகமனுசியாக சமூக அக்கறையோடுதான் பேசினார். அவரது இந்த பேச்சில் சமூக அக்கறை மட்டுமே பிரதிபலித்தது. அவர் பேசிய பேச்சில் எந்த தவறுமில்லை. அப்படி யாரையும் கஷடப்படுத்திருந்தால் அதை நாகரீகமாக அவர்கள் கூறியிருக்கலாம். அதற்க்கு ஜோதிகாவும் மதிப்பு கொடுத்திருப்பார் என அவர் கூறியுள்ளார்.

 

 

 

Categories

Tech |