படத்தில் ஹீரோயினியாக வாய்ப்பு தருகிறேன் என்று கூறி, என்னை பலாத்காரம் செய்து விட்டார் என்று இளம் நடிகை ஒருவர் பிரபல இயக்குனர் மீது புகார் கொடுத்துள்ளார்.
மலையாளத்தில் பிரபல இயக்குனர் கமல், தமிழ் மொழியில் பிரசாந்த், ஷாலினி வைத்து பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தை இயக்கியுள்ளார். மலையாள மொழியில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், பிருத்விராஜ், திலீப் ஆகிய முன்னணி ஹீரோக்கள் வைத்து 45-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னாடி இவரின் இயக்கத்தில் நடிகை மஞ்சு வாரியார், நடிகர் முரளி கோபி உள்ளிட்டோர் நடித்து ஆமி என்ற படம் வெளியானது.
அப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று கொடுத்தது. அதை தொடர்ந்து பிரணய மீனுகளுடே கடல் படத்தை அவர் இயக்கினார். இந்நிலையில் அவர் எடுக்கும் படத்தில் ஹீரோயினாக வாய்ப்பு தருவதாக கூறி இயக்குனர் கமல் தன்னை பலாத்காரம் செய்துவிட்டார் என்று ஒரு இளம் நடிகை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த இளம் நடிகை கொடுத்துள்ள புகாரில் கூறியதாவது;
இயக்குனர் கமல் ஆமி படத்தை இயக்கிய பொழுது, எனக்கு அவரது அடுத்த படத்தில் ஹீரோயினியாக வாய்ப்பு தருகிறேன் என்று கூறி அவரின் வீட்டிற்கு வர சொல்லி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அது மட்டுமின்றி ஆமி படப்பிடிப்பின் போதும் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி சீரழித்தார். அவர் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். அவர் மனசாட்சி உள்ள மனிதனே இல்லை “ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்” என்று அவர் ஆக்ரோஷமாக கூறினார். இயக்குனர் கமலுக்கு வக்கீல் நோட்டிஸ் ஒன்று அனுப்பியுள்ளார். இந்த புகை கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு இயக்குனர் கமல் அளித்த பதில்;
என் மீது கொடுத்துள்ள இந்த பாலியல் புகார் ஆதாரமற்றது. என்னுடைய பெயரை கெடுப்பதற்காக இந்த செயல். எனக்கு வக்கீல் நோட்டிஸ் வந்தது. இது மிக பொய்யான, தவறான புகார் என்று அவர் கூறியுள்ளார்.