தஞ்சை to மதுரை வரை 200 கிமீ ஊரடங்கு என்றும் பாராமல் தனது காதலனை பார்க்க நடந்தே சென்று கொண்டிருக்கும் பெண்ணை காவல்துறையினர் மீட்டு பாதுகாப்பான இடத்தில் சேர்க்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சையை சேர்ந்த பிஎஸ்சி பட்டதாரி பெண் ஒருவர் சமீபகாலமாக டிக்டாக் செயலிக்கு அடிமையாகி பல வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். அப்படி வீடியோக்களை வெளியிட்டு வந்த சூழலில் மதுரையைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இவருக்கு டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின் அவர் மீது காதல் கொள்ள இதை அறிந்த அவர் இந்தப் பெண்ணுடன் பழகுவதை நிறுத்தி விட்டார். காதலில் தீவிரம் காட்டத் தொடங்கிய அந்த பெண் அவரை சந்திப்பதற்காக ஊரடங்கு என்றும் பாராமல், தஞ்சையில் இருந்து மதுரை நோக்கி நடை பயணமாகவே செல்வதாக டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்துள்ளார்.
தஞ்சைக்கும், மதுரைக்கு சுமார் 200 கிலோ மீட்டர் இருக்கும். இதைப் பார்த்தவர்கள் சிலர் அவரை திட்டியும், அறிவுரை கூறியும் வீட்டிற்கு செல்லுமாறும் வலியுறுத்தி வந்தனர். ஒரு சிலர் காவல்துறையினர் இதனை கவனிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.