Categories
உலக செய்திகள்

கொரோனாவை பரப்பியது அமெரிக்க பெண் ? சீனா பதிலடி …!!

அமெரிக்க ரிசர்வ் படையை சேர்ந்த பெண் வீரர் ஒருவரால் தான் வூஹானில் கொரோனா பரவியதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது

சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் ஏராளமான உயிர்களை எடுத்தது. வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து கொரோனா தொற்று பரவியது என ஆய்வாளர்கள் பலர் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால் இதனை திட்டவட்டமாக சீனா மறுத்து வருகிறது. இதனை அடுத்து வைரஸ் பரவல் குறித்து சர்வதேச விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. அமெரிக்காவில் விசாரணையும் தொடங்கப்பட்டது.

சீனாவிலிருந்து தான் தொற்று பரவியது என தெரிய வந்தால் அதற்கு சரியான விலையை சீனா கொடுக்க வேண்டும் எனவும் அமெரிக்கா அறிவித்தது. ஐரோப்பிய யூனியனும் சீனாவிற்கு எதிராக சர்வதேச  விசாரணைக்கு அழைப்பு விடுக்க சீனா நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் எனவும் சர்வதேச விசாரணை அதிகாரிகளை எங்கள் நாட்டிற்குள் அ,னுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளது. இந்நிலையில் சீனாவில் இருக்கும் ஊடகங்களில் அமெரிக்க ரிசர்வ் படையின் பெண் வீரர் ஒருவரால் தான் வூஹான்  நகரில் கொரோனா பரவியது என செய்தி வெளியிட்டு வருகின்றது.

இந்த செய்தியினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் படையின் பெண் வீரரான மாட்ஜே பெனாஸி முதன்முறையாக தெரிவித்துள்ளார். சீனாவில்  ஊடகங்களில் தனது புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு உலகில் கொரோனா பாதித்த முதல் நபர் என பரப்பப்படுவது தனக்கு மிகுந்த கவலை அளிப்பதாகவும் தனக்கு கொரோனா அறிகுறிகளும் இல்லை அதோடு பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் சீனாவோ அமெரிக்க அரசு திட்டமிட்டு தான் அக்டோபரில் கொரோனாவை  பரப்பியதாகவும் வூஹானில் நடத்தப்பட்ட ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிக்கு பின்னரே தொற்று பரவ தொடங்கியதாகவும் தகவல் பரப்பி வருகின்றது.

மார்ச் தொடக்கத்தில் இந்த தகவல் பரவியதை தொடர்ந்து தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் வருவதாக தெரிவித்துள்ளார் பெனாஸி. கொரோனா தொற்று  பரவ  தொடங்கியவுடன் இது திட்டமிடப்பட்ட உயிரியல் ஆயுதம் என்றும் இதற்கும் அமெரிக்காவிற்கும் நிச்சயம் தொடர்பு இருக்கும் எனவும் தகவல் பரப்பப்பட்டது. தற்போது அமெரிக்க ரிசர்வ் படை வீரர் மீது கவனம் திரும்ப பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்களுக்கான சிறப்பு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு அதில் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்ட பெண் வீரரான பெனாஸி கடைசி சமயத்தில் விபத்து ஏற்பட்டு போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

அந்த விபத்தினால் அவரது விலா எலும்பு உடைந்து ஆபத்தான நிலையிலேயே இருந்துள்ளார். பெனாஸி மீது சீனா உள்ளிட்ட சமூக வலைதளங்கள் கவனம் திருப்புவதற்கு காரணம் ஒரு அமெரிக்கர் என்றும் 59 வயதான அவர் யூடியூபில் கொரோனா தொற்று  அமெரிக்க ராணுவத்தால் உருவாக்கப்பட்டது எனவும் சீனாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே பெனாஸி வாயிலாக கொரோனா  தொற்று பரப்பப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.  இதற்குப் பின்னரே பெனாஸிக்கு கொலை மிரட்டல் மற்றும் அவதூறு கடிதங்களும் வரத்தொடங்கியுள்ளன.

Categories

Tech |