Categories
அரியலூர் மாநில செய்திகள்

5 ஆண்டு சேமிப்பு….. 1000 பேருக்கு சூப்…. வறுமையில் வாடும் சிறுமிக்கு குவியும் பாராட்டு….!!

அரியலூர் மாவட்டத்தில் ஐந்து ஆண்டுகளாக சேமித்து வைத்த பணத்தில் தனது கிராம மக்களுக்கு சூப் போட்டு தருவதற்காக பயன்படுத்திய மாணவிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியையடுத்த குத்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபி. பதினொரு வயதாகும் இவர், அதே பகுதியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவர் பள்ளியில் பல போட்டிகளில் கலந்து அவ்வப்போது பரிசுகளும் பெற்றவர்.

இவருக்கு சமூக அக்கறையும் அதிகம் உண்டு. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா முழுவதும் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், தனது கிராம மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்பதற்காக ஐந்து ஆண்டுகளாக சேமித்து வைத்த ரூ3,000  சூப் தயாரிக்க செலவழித்தார். அதன்படி,

முருங்கைக்கீரை, மிளகு, சீரகம் உள்ளிட்டவற்றைக் கொண்டு மூலிகை சூப் தயார் செய்து தனது கிராமத்தில் உள்ள ஆயிரம் மக்களுக்கு வழங்கியுள்ளார். இவரது தந்தை சக்திவேல் சமீபத்தில் விபத்தில் இறந்த நிலையில், குடும்பம் வறுமையில் வாடிய சூழ்நிலையிலும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அவரது எண்ணத்தை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி தமிழக மக்களிடையே மனம் நெகிழச் செய்துள்ளது.

Categories

Tech |