Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் நிவாரண நிதிக்கு ஆர்பிஐ ஊழியர்கள் சார்பில் ரூ.7.30 கோடி நிதியுதவி..!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ஆர்.பி.ஐ ஊழியர்கள் சார்பில் ரூ.7.30 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடி நேற்று கேட்டு கொண்டார். அதில், நீங்கள் அனுப்பும் சிறு தொகை பேரிடர் மேலாண்மை, மக்களை காக்கும் ஆராய்ச்சிக்கு பயன்படும்.

எதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியம் நிறைந்த, வளர்ச்சி அடைந்த நாட்டை அளிப்பதற்கு உதவியாக இருக்கும். அதனால் நீங்கள் இயன்ற பண உதவியை செய்யுங்கள் என அவர் கேட்டு கொண்டார். அதேபோல, ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர் நிவாரண நிதி அமைக்கப்பட்டது. இந்த நிவாரணத்தில் டாடா நிறுவனம் ரூ.1,500 கோடியும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ரூ.51 கோடியும், ஜியோ நிறுவனம் 500 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர சினிமா பிரபலங்கள், அரசு அலுவலகங்கள், ராணுவ படை அதிகாரிகள் என பல்வேறு தரப்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 35 வது நாளாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. அதனை ஈடு செய்யவும் மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், இன்று ஆர்.பி.ஐ ஊழியர்கள் சார்பில் ரூ.7.30 கோடி நிதி உதவி வழங்குவதாக வங்கி தெரிவித்துள்ளது.

Categories

Tech |