Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ஒரே அறிக்கை…! ”வெளுத்து வாங்கிய சூர்யா” ஜோ_க்கு குவியும் ஆதரவு ..!!

நடிகை ஜோதிகா கருத்து சர்சையான நிலையில் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுமார் இருபது நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகா நான் தஞ்சாவூர் பெரிய கோவிலை சென்றேன்.  இது மிகவும் சிறப்பு மிக்க இடம், ரொம்ப அழகா இருந்தது. அனைவரும் சென்று பார்க்கலாம். அதே  போல நான் பள்ளி சென்ற போது அது ரொம்ப மோசமாக இருந்தது. இதனை கண்டு மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தேன். பள்ளிக்கூடத்தை பாருங்கள் என்று தெரிவித்திருந்தார்.

வடு மறையாமல் ஒடுங்கிப்போய் ...

இது இந்து மதத்தையும், தஞ்சை பெரிய கோவிலையும் இழிவாக  பேசும் செயல் என்றும், இதற்க்கு நடிகை சூர்யா மன்னிப்பு கேட்கவேண்டும், கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்கள். இது சமூக ஊடகங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. அதே போல ஜோதிகா கருத்துக்கு ஆதரவும் பெருகியது. இந்நிலையில் நடிகர் சூர்யா இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அன்பைவிதைப்போம் :

‘மரம் சும்மாயிருந்தாலும் காற்று காற்று விடுவதாக இல்லை’ என்கின்ற கருத்து ‘சமூக ஊடக’ விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது.

திருமூலர் காலத்து சிந்தனை :

‘கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும்’ என்கின்ற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை சிலர் குற்றமாகப் பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை என்பது திருமூலர் காலத்தில் சிந்தனை. நல்லோர் சிந்தனைகளை படிக்காத, காது கொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

இறைவன் உறையும் இடம் : 

பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கின்ற கருத்தை எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்க செய்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அளித்தது.

மதங்களை கடந்து மனிதமே முக்கியம் :

அறிஞர்கள், ஆன்மிகப் பெரியவர்கள் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்த கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். முகம் அறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதிலளிக்கிறார்கள்.

நெஞ்சார்ந்த நன்றி :

ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையை கையாண்டன. நல்ல எண்ணங்களை விதைத்து, நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எண்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் என நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |