Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கருஞ்சீரகம் – பல மருத்துவ குணங்கள்… இதில் இவ்வளவு நன்மையா..!!

மருத்துவ குணம் வாய்ந்த கருஞ்சீரகத்தை எந்த பிரச்சனைக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்…

1.கருஞ்சீரகப் பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கலந்து சிறிதளவு தேன் சேர்த்து பருகினால் சிறுநீரகக் கற்களும், பித்தப்பை கற்களும் கரைந்துவிடும். இதை காலை மாலை என இரு வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

2.தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்பப் படுபவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகப் பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட வேண்டும். இது நுரையீரலில் உருவாகும் சளியையும் அகற்றும்.

3.அடிக்கடி ஜலதோஷத்தால் பாதிக்கப்படுவோர் கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊற வைத்து பிறகு மூக்கில் 2 அல்லது 3 சொட்டுகள் விட்டு வந்தால் ஜலதோஷத்திற்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

4.தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. இதனை பொடி செய்து, சொரியாசிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்துக் குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும்.

5.குளியலுக்கு பயன்படுத்த பொடிகளில் கருஞ் சீரகத்தையும் சேர்த்து அரைத்து பயன்படுத்துவது நல்லது.

6.சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின், கழுவி வர முகப்பரு மறையும்.

7.சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

8.கருஞ்சீரகத்தை இலேசாக வறுத்து தூள் செய்து கொண்டு, மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு பத்து நாட்கள் முன்பிருந்தே ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் இரு வேளை தேன் அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிட வேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும்.

9.கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும். கருஞ்சீரகத்தில் ‘தைமோக்கியோனின்’ என்ற வேதிப் பொருளும் உள்ளது.

10.இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பும் குறையும்.

11.கருஞ்சீரகத்தில் நறுமண எண்ணெய் உள்ளது. இது வயிற்று உப்புசம் மற்றும் வலியை நீக்கி கழிவுகளை எளிதாக வெளியேற்றும் தன்மை கொண்டது.

12.இரைப்பையில் பாக்டீரியாவால் உண்டாகும் நோய் தொற்று மற்றும் உடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கும் தன்மையுடையது. கர்ப்பிணி பெண்கள் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Categories

Tech |