திருநாவுக்கரசர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக CBCID போலீசார் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு , சபரீஷ் , சதிஷ் மற்றும் வசந்தகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக திருநாவுக்கரசை சிறையில் வெளியே எடுத்து ரகசிய இடத்தில் வைத்து CBCID போலீசார் விசாரணை நடத்தினார்கள் . சிபிசிஐடி அதிகாரிகள் நடத்தப்பட்ட விசாரணையில் திருநாவுக்கரசு கொடுத்த வாக்குமூலம் மிக முக்கியமாக இருக்கிறது .
அவர் கொடுத்த வாக்குமூலத்தில் இன்னொரு நண்பர் தனக்கு உதவி செய்ததாக திருநாவுக்கரசு மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் என சிபிசிஐடி போலீசார் உறுதியாக தெரிவித்துள்ளனர் . இதையடுத்து 5_ஆவதாக இருக்கும் அந்த இளைஞரை கைது செய்யும் நடவடிக்கையில் தற்போது சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகிறார்.இன்று மாலை அல்லது நாளை அந்த இளைஞர் கைது செய்யப்படுவார் என்று சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது . மேலும் அந்த நபரை அடையாளம் கண்டு அவருக்கு இதில் என்ன தொடர்பு இருக்கிறது அது குறித்து ஆதாரங்களை தற்போது தயாரித்துக் கொண்டு இருப்பதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது .
மேலும் கோவை மாவட்ட SP இந்த வழக்கில் நான்கு பேர் மட்டும்தான் தொடர்பு இருக்கிறது , வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று சொல்லப்பட்ட சூழ்நிலையில் தற்போது ஐந்தாவதாக ஒரு நபருக்கு தொடர்பில் இருக்கிறார் அவரை கைது செய்யப் போகிறோம் என்று சிபிசிஐடி போலீசார் கூறியது இந்த வழக்கில் கூடுதல் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது . வீடியோ குறித்து தெரிவித்த CBCID போலீசார் தெரிவிக்கையில் ஏராளமான வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. எவ்வளவு வீடியோக்கள் சொல்ல முடியாத அளவுக்கு எண்ணிலடங்கா விடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது . அதிகமான அந்தரங்க வீடியோக்களில் சபரி ராஜன் மற்றும் சதீஷ் ஆகியோர் தான் இருக்கிறார்கள் என்பதை சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.