Categories
தேசிய செய்திகள்

“லூடோ ஆன்லைன் கேம்”… கணவனை வீழ்த்திய மனைவி… தோல்வி ஆத்திரத்தில் கணவன் வெறிச்செயல்!

ஆன்லைன் லுடோ விளையாட்டில் தொடர்ந்து தோற்ற கணவர் மனைவியை  தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வீட்டிலேயே இருக்கும் பலர் திரைப்படம் பார்ப்பதும் ஆன்லைனில் கேம் விளையாடுவதுமாக பொழுதை போக்கி வருகின்றனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதரா பகுதியை சேர்ந்த பெண் தனது கணவரிடம் பொழுதைப் போக்குவதற்கு கேம் விளையாடலாம் என யோசனை கூறியுள்ளார். அதன்படி கணவன் மனைவி இருவரும் லுடோ என்ற ஆன்லைன் கேமை விளையாடியுள்ளனர். விளையாட்டில் மூன்று முறை மனைவியை தொடர்ந்து ஜெயித்ததால் கோபம் கொண்ட கணவன் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த பெண் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் மருத்துவமனையில் அவருக்கு முதுகுதண்டில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து கணவரின் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகின்றது

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |