நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,594 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டள்ளது. மேலும் 51 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதைடுத்து, கொரோனாவால் மொத்தமாக பாதித்தவர்கள் எண்ணிக்கை 29,974 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், 22,010 தற்போது காரோணவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, இதுவரை கொரோனாவில் இருந்து 7,027 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 937 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங் பிறப்பிக்கப்பட்டு 35வது நாளாக அமலில் உள்ளது.
ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8,590 பேரும், குஜராத்தில் 3,548 பேரும், டெல்லியில் 3,108 பேரும், மத்யபிரதேசத்தில் 2,168 பேரும், ராஜஸ்தானில் 2,262 பேரும், தமிழநாட்டில் 1,937 பேரும், ஆந்திராவில் 1,183 பேரும், தெலங்கானாவில் 1,004 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் இதுவரை குணமடைந்தவர்களின் மீட்பு விகிதம் 23.3% ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.