நேற்று வரைக்கும் 1101 ஆக இருந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்றைக்கு 1, 128 ஆக உயர்ந்திருக்கிறது.
இன்றைக்கு 121 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. 1937ஆக நேற்று வரை இருந்த எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், நாமக்கல்லில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
மாவட்ட வாரியாக இதுவரை டிச்சார்ஜ் செய்யப்பட்டவர்களை பட்டியலை நாம் பார்ப்போமானால்:
அரியலூரில் 2 பேர்,
செங்கல்பட்டில் 40 பேர்,
சென்னையில் அதிகபட்சமாக 195 பேர்,
கோயம்புத்தூரில் 120 பேர்,
கடலூரில் 18 பேர்,
திண்டுக்கல்லில் 62 பேர்,
ஈரோட்டில் 64 பேர்,
கள்ளக்குறிச்சியில் 3 பேர்,
காஞ்சிபுரத்தில் 7 பேர்,
கன்னியாகுமரியில் 6 பேர்,
கரூரில் 41 பேர்,
மதுரையில் 36 பேர்,
நாகப்பட்டினத்தில் 28 பேர்,
நாமக்கலில் 45 பேர்,
நீலகிரியில் 9 பேர்,
பெரம்பலூரில் ஒருவர் ,
ராமநாதபுரத்தில் 7 பேர்,
ராணிப்பேட்டையில் 32 பேர்,
சேலத்தில் 16 பேர்,
சிவகங்கையில் 10 பேர்,
தென்காசியில் 2 பேர்,
தஞ்சாவூரில் 24 பேர்,
தேனியில் 36 பேர்,
திருப்பத்தூரில் 17 பேர்,
திருவள்ளூரில் 29 பேர்,
திருவண்ணாமலையில் 10 பேர்,
திருவாரூரில் 14 பேர்,
தூத்துக்குடியில் 25 பேர்,
திருநெல்வேலியில் 53 பேர்,
திருப்பூர் 83 பேர்,
திருச்சியில் 42 பேர்,
வெள்ளூரில் 13 பேர்,
விழுப்புரம் 22 பேர்,
விருதுநகரிலே 16 பேர் என மொத்தமாக பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1128 ஆக இருக்கிறது.