மிதுனம் ராசி அன்பர்களே …! இன்று மனதில் புத்துணர்வு ஏற்படும். குடும்ப உறுப்பினர் ஆதரவாக நடந்து கொள்வார்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். நண்பருக்கு இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். தெய்வ அருள் கிட்டும். விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலனைப் பெற கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும்.
எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுகிறீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலனை உங்களுக்கு கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாகவே நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும், மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும்.குழப்பம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக செல்லும்.
இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாகதான் உள்ளது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.