கோயம்பேட்டில் சந்தையில் கூலி தொழிலாளிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .
இன்று தமிழகத்தில் 121 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது கோயம்பேடு காய்கறி சந்தையில் கூலி தொழிலாளிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்த ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் அனுமதிகப்பட்டுள்ளார். கோயம்பேடு சந்தையில் இதுவரை 4 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இவர் 5ஆவது நபராக கண்டறியப்பட்டுள்ளார்.5 பேருக்கு நோய் உருவானதால் கோயம்பேடு சந்தை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.