Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…உடல் சோர்வு ஏற்படும்…மகிழ்ச்சி அதிகரிக்கும்…!

 

சிம்ம ராசி அன்பர்களே …!   இன்று அக்கம் பக்கத்தினர் அன்பு பாராட்டக் கூடும். எதிர்கால வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க  தாராள பணவரவு கிடைக்கும். வீட்டில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிலருக்கு விபத்துக்கள் ஏற்படுவதற்கான சூழல் உண்டு.மனதை மட்டும் நீங்கள் உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஆகையால் வாகனத்தை இன்று ஓட்டாமல் இருப்பது ரொம்ப நல்லது.கூடுமானவரை குலதெய்வத்தை வழிபட்டு எந்த ஒரு காரியத்தையும் செய்யுங்கள். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பதும் நல்லது. வீண் அலைச்சலை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள், உடல் சோர்வாக தான் இருக்கும்.

காதலர்கள் இன்று எந்த காரணத்திற்காகவும் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்:3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |