விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று முக்கியமான செயல் நிறைவேறுவதற்கு கடுமையாக உழைப்பவர்கள். ஆனால் எல்லா விஷயமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும். தொழில் வளர்ச்சி பெற முக்கியஸ்தர்களின் உதவிகள் கிடைக்கும். பணப் பரிவர்த்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும்.
புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். சக ஊழியர்கள் தங்கள் அந்தரங்க விஷயங்களை தயவுசெய்து யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். புதிய முயற்சிகள் சிலருக்கு கை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனம் வேண்டும், செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும்.
தந்தையின் உடல் நலத்தில் கவனமாக இருங்கள். நண்பர்கள் உறவினர்களின் பகை கொஞ்சம் உண்டாகலாம். கவனமாக பேசுங்கள், இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.