Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 2,162ஆக உயர்வு!

தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ல் இருந்து 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1,10,075 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது இன்று மட்டும் 7,886 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தற்போது 922 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |