Categories
சென்னை மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – வியாபாரிகளுக்கு பல்வேறு கட்டுபாடுகள்!

கோயம்பேடு சந்தையில் நேற்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என நேற்று காவல் ஆணையர் தெரிவித்திருந்தார். நேற்று மாலை கோயம்பேடு பூக்கடை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் இன்று மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு இடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது கோயம்பேட்டில் காய்கறி சில்லரை வியாபாரம் செய்ய அனுமதி இல்லை அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை மட்டுமே சில்லரை வியாபாரிகள் காய்கறி வாங்கி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கிவரும் 1,500 கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |