சென்னை மந்தைவெளியில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மந்தைவெளியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் நேற்று வரைக்கும் சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைத்து மக்களுக்கு தொடர்ச்சியாக பொருட்களை வழங்கி வந்துள்ளனர். கணவன், மனைவி, மகன், மக்கள் என நான்கு பேருக்கும் நேற்று சளி, காய்ச்சல், இருமல் என அறிகுறி வரவே அவர்கள் உடனடியா அருகாமையில் இருக்கக்கூடிய தனியார் பரிசோதனை மையத்துக்கு சென்று சோதனை செய்து கொண்டுள்ளனர்.
அதனுடைய ரிசல்ட் இப்போது வந்துள்ளது. அதில் தற்போது 4 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தகவல் தற்போது சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தப்பட, மாநகராட்சி நிர்வாகம் சூப்பர் மார்க்கெட்டில் கிருமிநாசினி தெளிக்கக்கூடிய பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரும் மருத்துவமனைக்கு இன்னும் சிறிது நேரத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறத்தில் அவர்களின் சூப்பர் மார்க்கெட்டுக்கு யார் யார் வந்துட்டு போனாங்க? அவர்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரையும் தொடர்பு கொள்ளக்கூடிய பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.