காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை” தனது ஜலசக்தி துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரும் செயலை முக.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை” தனது ஜலசக்தி துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், அரசு தமிழக உரிமையை பிடிங்கி எறியும் கருணையற்ற செயல் என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜனசக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்ததற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் ஜீவாதார உரிமை ஆணி வேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற செயல் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள ஸ்டாலின் தமிழக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றவேண்டும். அதிமுக அரசால் காவிரி நதிநீர் உரிமை பல கட்டமாக பறிகொடுக்கப்பட்ட நிலையில், காவிரிநதிநீர் மேலாண்மை ஆணையத்தையும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் கைப்பாவை அமைப்பாக மாற்றி உள்ளது மத்திய அரசு. #CWMA -ன் தன்னாட்சியை முடக்கும் முடிவினைத் திரும்பப் பெறாவிடில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.