Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கிருமிநாசினி தெளிக்காத அலுவலகங்கள் சீல் வைக்கப்படும் – மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னையில் கிருமிநாசினி தெளிக்காத அலுவலகங்கள் சீல் வைக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் ஏன் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தவறும் நிறுவனங்கள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், கிருமிநாசினி தெளிக்காத அலுவலகங்கள் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கு இயங்கும் அலுவலகங்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். சுத்தம் செய்யும் பணியாளர்களை அந்தந்த நிறுவனங்கள் நியமிக்க வேண்டும். சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏ.டி.எம்ல் ஒரு நபர் பயன்படுத்திய பிறகு உடனே கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என சென்னை மாநகராட்ச்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 673ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்திலேயே சென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |