மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும் உறுதியையும் குறிக்கும் ஓர் தினம். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தினம். மே 1 ஏன் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உறக்கம் என்னும் கோரிக்கையை வலியுறுத்தியும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டும் தொழிலாளர்கள் போராடினர். இதை எதிர்த்து அமெரிக்க அரசு ஈவிரக்கமற்ற தாக்குதலை நடத்தியது. ஏராளமான தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கொல்லப்பட்டனர்.
இதன்பிறகு உலகத் தொழிலாளர்களின் துன்பத்திற்கான காரணத்தை கண்டறிந்து முதலாளிகளை ஒழித்துக்கட்டி தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தால் தான் அனைத்து விதமான துன்பங்களும் தீரும் என்றும் முதலாளிகள் உலக வரலாற்றின் வளர்ச்சிப் போக்கை தடுத்து வருகின்றனர் என்றும் இதனை முடிவுக்கு கொண்டு வரும் வல்லமை தொழிலாளர்களிடம் மட்டும்தான் உள்ளது என்றும் இதையெல்லாம் செய்வதற்கு உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்றும் கூறினார் பொதுவுடமையின் தந்தை மூலதனத்தின் மூலம் காரல் மார்க்ஸ்.
அவருடைய வழிகாட்டுதலின் படி 42 ஆண்டுகள் உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டத்தால் இந்த வெற்றி நிலைநாட்டப்பட்டது. உலக மக்கள் தொழிலாளர்களின் உழைப்பினால் தான் உலகமே இயங்குகிறது. தொழிலாளர்களின் உழைப்பு இன்றி எந்த பொருளும் உருவாவதில்லை என்ற உன்னதமான உண்மையை உணரத் தொடங்கினார். உழைப்பின் பலன்களையெல்லாம் அனுபவிக்கும் முதலாளிகள் தொழிலாளர்களை வறுமையிலும் துன்பத்திலும் இருக்கும்படி செய்கின்றனர் என்பதை உணர்ந்து ஒன்றுபட்டு உரிமைக்காக போராடினார்.
இதன் விளைவாக 1876 ஆம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலைநிறுத்தம் துவங்கியது. தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால் அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன ரயில் போக்குவரத்து நடைபெறவில்லை வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. இதன் விளைவாக அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்ட இயக்கங்களை நடத்தியது. அதோடு மட்டுமல்லாமல் மே 1 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது.
இவ்வியக்கம் மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது. இவ்வாறு உலகெங்கும் நடந்த போராட்டத்தின் விளைவாக அமெரிக்காவில் இதற்கான வெற்றியை அடைந்த தொழிலாளர்கள். தொழிலாளர்களின் போராட்டத்தால் நிலைகுலைந்த அரசு அவர்களின் கோரிக்கையை 1890 ஆம் ஆண்டு ஏற்றுவது தொழிலாளர்களில் இந்த வெற்றியை குறிக்கும் விதத்தில் தான் மே முதல் நாள் தொழிலாளர் தினமாக மே தினம் என்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. நமது இந்தியாவில் சென்னையில் தான் முதன்முதலில் மே தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடமைவாதி குமார் சிங்காரவேலர் 1923 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவை கொண்டாடினார்.
இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்து தங்கள் உரிமையை அடைவதற்கான போராட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தொழிலாளர்கள் ஜாதி, மதம், இனம் மொழி ஆகியவற்றை கடந்து தொழிலாளர்கள் என்னும் உணர்வுடன் ஒன்றுபட்டு வெற்றி கிடைத்தே தீரும் என்பதை மே தினம் வலியுறுத்தும் மகத்தான வரலாறு. எனவே உழைப்பின்றி ஊதியம் இல்லை உழைப்பு இல்லையேல் இந்த உலகமே இல்லை உழைப்பு ஒன்றே நமது வாழ்வில் உயர்வைத் தரும் என்ற மேற்கோளுக்கு இணங்க அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறோம்