Categories
அரசியல்

“விலகி இருப்போம்” என்ற நிலையில் இவர் மட்டும் “ஒன்றிணைவோம் வா” என அரசியல் செய்கிறார்: ராஜேந்திர பாலாஜி

அனைவரும் விலகி இருப்போம் என கூறும் நிலையில் ஸ்டாலின் மட்டும் ‘ஒன்றிணைவோம் வா’ என அரசியல் செய்கிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கொரோனா பேரிடர் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைவோம் வா எனும் இயக்கம் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவிர 10 லட்சம் தன்னார்வலர்களையும் இணைத்து தமிழகம் முழுவதும் கரோனா நிவாரணப்பணியில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த செயல்திட்டம் மூலம், செயல்திட்டம் குறித்து காணொலிக் காட்சி மூலம் தினமும் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள, பொதுமக்களுக்கான உதவி எண்ணான “90730 90730” என்ற அலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு பொதுமக்கள் தெரிவித்த குறைகள் மற்றும் பிரச்னைகளுக்கு எட்டப்பட்ட தீர்வுகள் குறித்து, திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம், தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியக் குழுத் தலைவர்கள் ஆகியோரைக் காணொலிக் காட்சி மூலமாகத் தொடர்புகொண்டு விசாரித்தார்.

மேலும், இத்திட்டத்தை மேம்பட செய்ய வேண்டும் எனவும் தனது நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதனை மேற்கோள் காட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலினை விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |