Categories
தேசிய செய்திகள்

பஞ்சாபில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் ஊரடங்கு… மாநில முதல்வர் உத்தரவு!

பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 2 வாரத்துக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலை 7 மணி முதல் 11 மணி வரை கடைகள் திறக்கப்பட்டு மக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 35வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதன் காரணமாக தான் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974ல் இருந்து 31,332 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,007 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,696 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலகங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் கடந்த 27ம் தேதி பிரதமருடன் நடைபெற்ற மாநில முதல்வர்கள் ஆலோசனையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. முன்னதாக தமிழகத்தில் 5 மாநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பஞ்சாப் மாநிலம் முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை 322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 71 பேர் குணமடைந்துள்ளனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |