Categories
பல்சுவை

சிந்தனையாளர் காரல் மார்க்ஸ் – தொழிலாளர்கள் தினம் உருவாக காரணமானவர்

முதலாளிகளால் வதைக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு நீதி கிடைக்க செய்த மாமனிதர் காரல் மார்க்ஸ் பற்றிய தொகுப்பு

அது ஒரு இருண்ட காலம் அன்றைக்கு உழைக்கும் பாட்டாளி வர்க்கமும் புரட்சியாக சுரண்டப்பட்டு கொண்டே இருந்தது. குறைப்பதஉழைப்பதற்கும் உறங்குவதற்கு மட்டும் தான் எல்லா உடல்களுக்கும் அன்றைக்கு நேரமிருந்தது. உழைப்பாளி உயிர் வாழ்வதற்குத் தேவையான சொற்ப பணத்தை மட்டும் கூலியாக கொடுத்துவிட்டு உழைப்பை சுரண்டிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது உலக மனித குலத்தின் வரலாற்றை தெளிவாக ஆய்வு செய்தார் ஒருவர்.

உலகம் தோன்றிய காலம் முதல் இப்போது வரையிலான அனைத்து மாற்றங்களுக்கும் மனித உழைப்பே ஆதாரமாக இருந்திருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்தார் அவர். உழைப்பினால் கிடைத்த லாபத்தை  அனைவரும் சமமாக பகிர்ந்தவரை வேதங்கள் இல்லை ஆனால் அது போக மீதமிருந்த உபரி மதிப்பு மீண்டும் மூலதனமாக ஆக்கப்பட்டது  தான் வர்க்கங்கள் உருவாக காரணம் என ஒட்டுமொத்த உலக வரலாற்றின் முடிச்சுகளையும் அவிழ்த்தார் அந்த மனிதர். அவர்தான் கார்ல் மார்க்ஸ்.

 விதைத்தவன் உறங்கலாம் விதைகள் என்றும்  உறங்குவது இல்லை என்ற கார்ல் மார்க்சின் வார்த்தைகள் தான் இன்றைக்கும் அவருக்கும் பொருந்துகிறது. அவர் விதைத்த விதை தான் இன்று உலகையே இயக்கிக் கொண்டிருக்கிறது. 1818 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி ஜெர்மனியில் ஒரு வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்தார் கார்ல் மார்க்ஸ். பெற்றோருக்கு  மதநம்பிக்கை அதிகம் இருந்தாலும் கார்ல் மார்க்ஸ்க்கு மதங்களில் ஈடுபாடில்லை.

இம்மானுவேல், கண்ட், வால்டர் ஆகிய தத்துவவாதிகளின் தத்துவங்களில் இருந்த ஈடுபாட்டின் காரணமாக சிறு வயது முதலே புரட்சிகர சிந்தனைகளில் இருந்த காரல் மார்க்ஸ் 17 ஆம் வயதில் பான் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். அப்போது பொதுவுடைமைக் கொள்கையை கண்டித்து பல்கலைக்கழகம் வெளியேற்றியது. 1841 ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்தார்.

தனது சிறு வயது தோழியான ஜென்னியை  பல இன்னல்களை கடந்து 1843 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். 1844 ஆம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் மார்க்சும் எங்கெல்சும் சந்தித்துக் கொண்டனர். எண்ணற்ற இடங்களில் தங்களது சிந்தனை ஒத்து இருப்பதை அறிந்து இவர்கள் இருவரும் அன்றிலிருந்து மார்க்சின் கடைசி மூச்சு வரை இணை பிரியாத நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்.

உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதலாளித்துவத்துக்கு எதிரான சக்தியாக மாற்றும் நோக்கத்தோடு பொதுடைமை சங்கத்தை தோற்றுவித்தார். முனைவர் பட்டம் பெற்ற பிறகு ரெயினீஸ் ஜித்தான் என்கிற ஜெர்மானிய பத்திரிகையின் ஆசிரியரானார் காரல் மார்க்ஸ். அவரது எழுத்துகள் பாட்டாளிகள் எவ்வாறு முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என்பதை தெளிவாகக் கூறியது.

பாட்டாளிகள் அனைவருக்கும் இந்த அடக்குமுறையை தகர்த்தெறிய அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று அவர்களுக்கு உத்வேகம் கொடுத்தன. ஆனால் அதே எழுத்துக்கள் தான் அரசாங்கத்தை அச்சமுற்று நடுங்க செய்தன கார்ல் மார்க்சின் சிந்தனையி எழுத்தையும் கண்டா பிரஷ்ய அரசு அவரை நாடு கடத்தியது. பிரான்ஸ் அரசோ ஒரு நாளுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கை செய்தது.

அவரது மனைவி ஜென்னி கைது செய்ய பட்டு விபச்சார கைதிகளுடன் அடைக்கப்பட்டார் சித்தரவதை செய்ய பட்டர் உலகத் தொழிலாளர்களின் விடு வெள்ளியாக இருந்த மார்க்சின் குடும்ப வாழ்க்கை மிகுந்த துன்பங்களுடனே கடந்தது. லண்டனில் இருந்த பொழுது  அவரது 4 குழந்தைகளும் வறுமையால் பசியில் வாடினார்கள். வறுமையால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு இறக்கும் அளவு துன்பம் வந்த போதும் ஜென்னி மார்க்சுக்கு உறுதுணையாக வாழ்ந்தார்.

1867 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதியன்று தனது 15 ஆண்டுகளில் போராட்ட வடிவத்தை மூலதனம் எனும் புத்தகமாக வெளியிட்டார். இந்த புத்தகம் வெளியான போதே உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் மார்க்ஸ் மரணத்திற்கு பின்னர் வெளியாயின. உலகில் பைபிள்க்கு பிறகு அதிக மக்களால் மதிக்கப்பட்ட நூல் என்ற பெருமைக்குரியது இந்த மூலதனம் தான்.

தொழிலாளர்கள் வாழ்வில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது இதே மூலதனம் தான். ஒரு பென்சில் தயாரிக்கும் முதலாளி தன்னை சந்தையில் நிலைநிறுத்திக்கொள்ள பொருளின் விலையை குறைக்கிறான். இதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட தொழிலாளியின் உழைப்பை சுரண்டுகிறான்.  இது எதுவுமே தெரியாததால் தொழிலாளி தனது முதலாளியை கடவுளாக வழங்குகிறான் என காரல் மார்க்ஸ் மூலதனம் புத்தகத்தில்விளக்குகிறார்.

கடுமையான நெருக்கடிகள், துன்பங்கள், துயரங்கள் இடையே அலைக்கழிக்கப்பட்டு கொண்டிருந்த காரல் மார்க்ஸ் 1883 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இல்லை அவர் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார். மார்க்ஸ் இறந்து  200 ஆண்டுகள் ஆகி விட்டன ஆனால் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு தேவையான சிந்தனை வளத்தை இந்த பூமிக்கு அவர் அளித்து விட்டுச் சென்றிருக்கிறார்.

எப்போதெல்லாம் உலகப் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றதோ அப்போதெல்லாம் பொருளாதார அறிஞர்கள் காரல் மார்க்ஸின் என்ன சொல்லி இருக்கிறார் என்றுதான் ஆராய்ந்து பார்க்கிறார்கள். எப்போதெல்லாம் உலகத் தொழிலாளர்கள் தங்கள் வதைக்கப்படுவதாக உணர்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்கு நம்பிக்கை தரும் வாசகமாக தூரத்து அசரீரியாக ஒரு குரல் ஒலிக்கின்றது.

“உலகத் தொழிலாளர்களே, ஒன்று கூடுங்கள் இழப்பதற்கு அடிமை சங்கிலியை தவிர உங்களிடம் வேறு எதுவும் இல்லை.”

Categories

Tech |