Categories
இந்திய சினிமா சினிமா

“முதியவரின் செயலால் நான் அழுதேன்”…டைட்டானிக் காதல் புறா….!!

முதியவரின் செயல் என்னை அழவைத்து விட்டது என்று  டைட்டானிக் நடிகை கேட் வின்ஸ்லெட் தெரிவித்துள்ளார்.

அன்றும், இன்றும், என்றும் என காலங்கள் பல கடந்த போதிலும், அழிக்க முடியாத காதல் காவியமாய் உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக பேசப்படும் படம் டைட்டானிக். இந்த படத்தில் ஜேக்-ரோஸ் என்ற அந்த காதல் கதாபாத்திரங்கள் பலரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தது. அதனால்தான் என்னவோ இன்றும் யாரும் மறக்காமல் இருக்கிறார்கள்.

அந்த படத்தில் டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு வருத்தப்பட்டவர்களை விட. இந்த காதல் புறாக்கள் பிரிந்ததற்கே அதிகம் பேர் கவலை அடைந்தனர். அப்படத்தின் காதல் புறா நடிகை கேட் வின்ஸ்லெட் இந்தியாவிற்கு பயணம் வந்த பொழுது ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியது; 

டைட்டானிக் படம் வெளியான சில வருடங்களுக்கு பிறகு நான் இந்தியாவில் இருக்கும் இமயமலை பகுதிகளில் பைகளை மாட்டிக்கொண்டு அங்கு நடந்து போய் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு வயதான முதியவர் கைத்தடியை ஊன்றி கொண்டே என்னை நோக்கி வந்தார். அவருக்கு குறைந்தது 85 வயது இருக்கும். அவர் என்னைப் பார்த்து நீ டைட்டானிக் நடிகை ரோஸ் தானே என்று என்னிடம் கேட்டார். அவர் கேட்ட பதிலுக்கு நான் ஆமாம் என்று தலை ஆட்டினேன். உடனே எனது கையை எடுத்து அவரது இதயத்தில் வைத்து நன்றி என கூறினார்.

அவரது செயல் என்னை அழவைத்து விட்டது. நான் உணர்வுபூர்வமாக பொங்கியெழுந்து அழுது விட்டேன். நான் ஆமாம் என்று தலையாட்டினேன். அப்படத்தில் நான் நடித்திருந்த ரோஸ் என்னும் கதாபாத்திரம் இத்தனை பேரின் மனதில் பதிந்திருக்கிறது என்ற உண்மையை என்னால் புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவியது என்று மிக மகிழ்ச்சியாக கூறினார். மேலும் இத்திரைப்படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனுக்கும் இது மிகவும் பெருமையாக இருக்கும். ஆனால் இப்படத்திற்கு கிடைத்த மிக பெரிய வெற்றியானது என்னை கஷ்டபடுத்தியது என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |