மேஷம் ராசி அன்பர்களே …! இன்று கோபத்தை அடக்கி அனைவரிடமும் பரிவுடன் நடப்பது ரொம்ப நல்லது. மௌனமே கோபத்திற்கு மருந்தாகும் தயவுசெய்து அதை புரிந்துகொண்டு எதற்கும் வாய் திறக்காமல் இருப்பது ரொம்ப சிறப்பு. மனதில் குழப்பமும் அவ்வப்போது வந்து செல்லும். உங்களிடம் ஆலோசனை கேட்டு சிலர் நாடி வரக்கூடும். இன்று எதையும் வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நட்பு அதிகமாகும்.
நட்பு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆனால் நட்பிடம் பழகும் போது கவனமாக இருங்கள் எதிலும் மெத்தனப்போக்கு தயவு செய்து காட்ட வேண்டாம். அலட்சியம் இருந்தாலே காரியங்களில் தடைகள் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுதல் கவனமாக இருந்தால் மட்டுமே இன்றைய நாளை நீங்கள் சிறப்பான நாளாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம். மன அமைதி ஓரளவு தான் இருக்கும். இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள் அனைத்தும் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாக இருக்கும்.
இன்று கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். ஆனால் குடும்பத்தாரிடம் கொஞ்சம் கோபப்படாமல் உங்கள் பிள்ளைகளிடம் அன்பு செலுத்துங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அதுமட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.