தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இன்று இருவர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ல் இருந்து 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 673ல் இருந்து 767ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. சென்னையை சேர்ந்த 65 வயது முதியவர், மற்றும் 27 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
32 மாவட்டங்களில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று 82 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,128ல் இருந்து 1,210ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் சதவிகிதம் 55.97%ஆக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.