கடகம் ராசி அன்பர்களே …! இன்று மனம் கொஞ்சம் அலைபாயும். நல்ல நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வருமானத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாகவே இருக்கும். சில உறவுகளால் இன்று மன நிம்மதி குறையலாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். மன தைரியம் அதிகரிக்கும்.
எல்லா வகையிலும் உங்களுக்கு நட்பால் ஆதாயம் இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும், அதாவது வயிறு கோளாறு சம்பந்தமான பிரச்சினைகள் எழக்கூடும் தூக்கம் குறையும். எதிர் பாலினரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். முக்கிய நபர்களின் உதவி இன்று உங்களுக்கு கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். வெள்ளை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடி ஆக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.