Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா …..!!

சென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயபுரம், வியாசர்பாடி, கொண்டித்தோப்பு பகுதியில் இருக்கக் கூடிய தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றக்கூடிய தீயணைப்பு வீரர்கள் 3 பேருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதமாகவே சென்னையில் கொரோனா தொற்று அதகிகரித்து வரக் கூடிய நிலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள்,  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை உள்ளிட்ட அரசு கட்டிடங்களுக்கு கிருமி நாசினிகளை அளிக்கக்கூடிய பணி என்பது நடைபெற்றது.

மணப்பாறையில் கிருமிநாசினி தெளிப்பு ...

கோயம்பேட்டில் இருக்கக்கூடிய காய்கறி மார்க்கெட்டில் கடந்த இரண்டு வாரங்களாகவே தொடர்ச்சியாக கிருமி நாசினி தெளித்து பணி என்பது நடைபெற்றது. இந்த பணிகளில் தீயணைப்பு படை வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் ஆகியோர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார்கள்.

இந்நிலையில் தான் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட  3 தீயணைப்பு படை வீரர்களுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இவர்கள் 3 பேரும் பேசின் பிரிட்ஜ் பகுதியில் இருக்கக்கூடிய தீயணைப்பு வீரர்களுக்கான குடியிருப்பில், தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அவர்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். தீயணைப்பு வீரர்கள் மூன்று பேரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Categories

Tech |