கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒடிஷா முதல்வருடன் தமிழக முதல்வர் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகின்றார்.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகிறார். ஒடிசா மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கையை என்னென்ன? நோய் குறைப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நேரடியாக காணொளி மூலம் தமிழக முதலமைச்சர் ஆலோசிக்க இருக்கின்றார்.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை ஒடிசா மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே நோய்த்தொற்று இருக்கிறது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் எது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதே போல ஊரடங்கு கட்டுப்பாடுகள், மருத்துவ பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நேரடியாக தமிழக முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் காணொலிக் காட்சி மூலம் கேட்டறிகின்றார்.