இரண்டு குழந்தைகளை பராமரிப்பதற்கான செலவை கணவனிடம் கேட்டதால் ஆத்திரமடைந்த கணவன் நீதிபதி முன்பே கத்தியால் மனைவியை சரமாரியாக தாக்கினார்
சரவணன் வரலட்சுமி ஆகியோர் சென்னையை சேர்ந்த தம்பதியினர் இதில் சரவணன் என்பவர் சென்னையில் போக்குவரத்து துறையில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் கடந்த நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளன இந்நிலையில் சரவணன் தனது மனைவி தனக்கு தொந்தரவாக இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் விவாகரத்திற்காக மனு அளித்துள்ளார்
இந்நிலையில் இதற்கான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இதனையடுத்து இன்று விசாரணைக்கு இருவரும் அழைக்கப்பட்ட நிலையில் இருவரும் சென்னையில் உரை உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தனர் இந்த விசாரணையானது உயர்நீதிமன்றத்தில் அமைந்துள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்கப்பட்டது இதனை விசாரித்துக் கொண்டு இருக்கும்பொழுதே திடீரென சரவணன் தன் முதுகுக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கினார் இதில் வரலட்சுமி படுகாயமுற்றார்
மேலும் மனைவியை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற சரவணனை அங்குள்ள வழக்கறிஞர்கள் மரித்துப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர் இதனை அடுத்து காயமுற்ற மனைவி வரலட்சுமி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்த பொழுது வரலட்சுமி தனது 2 குழந்தைகளை பராமரிப்பதற்கான செலவினை சரவணன் அவர்களிடம் கேட்டதால் வாக்குவாதம் ஆனது தீவிரமடைந்து உள்ளது இதனையடுத்து கோபத்தில் இருந்த சரவணன் இன்று பழி தீர்த்துபறித்து விட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்