தனுசு ராசி அன்பர்களே ..! இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சுமாரான நாளாகத்தான் இருக்கும். இன்று எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக தான் காரியங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். கடின உழைப்பால் தொழில் விருத்தி காணலாம். கௌரவக் குறைவு ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும், அதாவது பேசும்போது நிதானத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள்.
பணவரவு எதிர்பார்த்தபடி இருப்பதில் சிக்கல்கள் இருக்கும். எதிர்ப்பாளர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உங்களுக்கு இருக்கும் கவலையில்லை. உறவினர்களிடம் இன்று கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். செலவை தயவு செய்து நீங்கள் தவிர்க்க வேண்டும். விண் செலவை தயவுசெய்து தவிர்த்துவிட்டு சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது ரொம்ப நல்லது. உடல் பாதிப்பு போன்றவை ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக இருங்கள்.
யாருக்கும் எந்தவித வாக்குறுதிகளையும் தயவுசெய்து கொடுக்காதீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.