Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவருடன் மோதும் தல….! செம வெய்ட்டிங்கில் ரசிகர்கள்…!!

பொங்கல் தினத்தன்று, ரஜினி படமும், தல அஜித்தின் படமும் மோதலில் இறங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தல அஜித்தின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் தான் வலிமை. இப்படத்தின் வரவேற்பிற்காக தல ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு 40% தான் முடிவடைந்திருக்கிறது. படத்தின் மீதி படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு முடிந்து, கொரோனோவால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இயல்பு நிலைக்கு  திரும்பிய பின்னரே எடுக்க படும் என்று கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பாதிலேயே நிற்பதால், இந்த வருட தீபாவளிக்கு நிச்சயமாக ரீலிஸ் ஆகாது. அதனால் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்பது போல் தெரிகிறது. அதேசமயம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் பொங்கல் தினத்தன்று வெளியிடுவதற்கு அப்படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஷ்வாசம் படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |