Categories
அரசியல்

சொல்லுங்க…. என்ன பண்ணுனீங்க….. எப்படி பண்ணுனீங்க…. புது முயற்சியை கையிலெடுத்த எடப்பாடி …!!

தமிழக அரசு கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவுக்கு வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசு மே 3ம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தி, கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 31ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7500 க்கும் மேற்பட்டோர் குணமடைந்து, ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

2ஆம் இடம் : 

தமிழகத்தைப் பொருத்தவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதில், 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அளவில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட 6ஆவது மாநிலமாக உள்ள தமிழகம், சிறப்பான சிகிச்சையினால் அதிகமானோரை குணப்படுத்தி இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளாது. மகாராஷ்டிரா 1500க்கும் அதிகமானோரை குணப்படுத்தி வீடு அனுப்பிய நிலையில், தமிழகம் ஆயிரத்து 210 பேரை கொரோனாவில் இருந்து மீட்டுள்ளது.

துரித நடவடிக்கை : 

கொரோனா பரவ தொடங்கியதுமே தமிழகம் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்தியது. மருத்துவ உபகரணம், கொரோனாவை கண்டறியும் விரைவு பரிசோதனை கருவிகளை பிறநாடுகளில் இருந்து ஆர்டர் செய்தது. இந்தியாவிலே அதிகமான ஆய்வு மையம் என தமிழக அரசும், தமிழக சுகாதாரத் துறையும் துரிதமான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொரோனாவுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

புதுமுயற்சி : 

இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனவை கட்டுப்படுத்த புது முயற்சியாக ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உடன் இன்று பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் 125 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 85 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வரும் நிலையில் அங்கு கொரோனா முழு கட்டுக்குள் வந்துள்ளது.

காணொளியில் ஆலோசனை :

கொரோனா தடுப்பு மற்றும் சுகாதாரப்பணிகளை ஒரிசா மாநில அரசு எப்படி மேற்கொண்டது. கொரோனவை திறம்பட கையாண்டது, கட்டுக்குள் வைத்தது எப்படி ? அங்கு ஊரடங்கு எப்படி கடைப்பிடிக்கிறது. கொரோனா தடுப்பு பணிகள் என்றால் எது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற பல்வேறு விஷயங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உடன் நேரடியாக காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார். தமிழக அரசு கொரோனவை கட்டுப்படுத்த எடுத்துள்ள புது முயற்சியாகவே இது பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |