பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ரைசா, ரசிகர்கள் அடித்த கிண்டலுக்கு, ரொம்ப கூலாக பதில் கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரையும் கவர்ந்த புகழ்மிக்க நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தின் மூலம் ரைசா பிரபலமானார். பிக் பாஸ்ஸிற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் பல கிடைக்க, தற்போது சில படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணத்தினால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இக்காரணத்தினால் அனைத்து திரை பிரபலங்களும் வீட்டில் முடங்கியுள்ளனர். அவர் வீட்டில் சும்மாவே இருப்பதால் சமூக வலைதளத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். அவரிடம் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனே பதில் அளிக்கிறார். அது மட்டுமின்றி அவருக்கு வரும் கமெண்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதில் கூறி வருகிறார். இந்நிலையில் நெட்டிசன் ஒருவர், நடிகை ரைசாவுடன் வடிவேலு பாணியில் மீம்ஸ் ஒன்றை ட்விட்டரில் பதிவு செய்தார்.
அதாவது வடிவேலு ரைசாவிடம் பேர் என்ன என்று கேட்க, அதற்கு அவர் ரைசா என்கிறார். அதற்கு வடிவேலு சிக்கன் ரைசா இல்லை?.. எக் ரைசா என்று கேட்பது இருக்கும் அந்த மீம்ஸில். இந்த மீம்ஸை பார்த்த ரைசா கூலாக பிரியாணி ரைஸ் என்று கமெண்ட் அடித்துள்ளார். ரைசா பண்ண கமெண்ட்டை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதற்கு, இது தான் உங்களிடம் எங்களுக்கு பிடிச்ச விஷயம்என கூறியுள்ளார்கள்.