பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மரணம் அடைந்த செய்தி இந்திய சினிமாவை உலுக்கியெடுத்துள்ளது.
இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் பாபி, லவ் ஆஜ் கல் என பல படங்களில் நடித்து ரசிகர்களை மத்தியில் பிரபலம் ஆன நடிகர் ரிஷி கபூர். இவரின் தம்பி பிரபல நடிகர் ரந்தீர் கபூர், இவரின் மகன் ரன்பீர் கபூர் தற்போது பாலிவுட் உலகில் முன்னணி ஹீரோவாக இருந்து ரசிகர்களிடம் கொடிகட்டி பறக்கிறார். 67 வயதான ரிஷி கபூரின் கடந்த வருடம் தான் கேன்சர் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று இந்தியா திரும்பினார்.
கடந்த சில நாட்களாக உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் மும்பையில் உள்ள எச்.என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தொடர்ந்து அவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் மருத்துவமனையில் இக்கட்டான நிலையில் இருப்பதாக தகவல் வந்து கொண்டு இருந்த நிலையில் தற்போது அவர் மரணமடைந்துள்ளார்.
Heartbroken … Rest In Peace … my dearest friend #RishiKapoor
— Rajinikanth (@rajinikanth) April 30, 2020
நேற்று தான் பாலிவுட் நடிகர் இர்பான் கான் மரணம் இந்திய சினிமாவை அதிர்ச்சியடைய வைத்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபலம் உயிரிழந்துள்ளது இந்திய சினிமாவை உலுக்கியுள்ளது. இதற்க்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் என்னுடைய நெருங்கிய நண்பர் ரிஷிகபூர் மறைவால் என் இதயம் உடைந்து விட்டது என்று ட்விட் செய்துள்ளார்.