கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கு தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.. இதனால் அனைத்து போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதனிடையே வாகனம் ஏதும் ஓடாததால் பல்வேறு பகுதிகளில் சிக்கித்தவிக்கும் சிலர் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு நடந்தும், மிதிவண்டியிலும் சென்ற வண்ணம் இருக்கின்றனர்.
இந்நிலையில் அரும்பாவூர் காவல் ஆய்வாளர் கலா தலைமையில் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு நபர் மிகவும் சோர்ந்து போய் களைப்புடன் நடந்து சென்றுகொண்டு இருந்ததைக் காவல் துறையினர் கண்டனர்.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் கலா மற்றும் சக காவலர்கள் பாண்டியராஜனுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து பசியாற்றினார். மேலும், 200 கிமீ நடந்தே வந்ததில் அவருடைய உடல் நிலை சரியில்லாமல் போனது. இதன் காரணமாக அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார் காவல் ஆய்வாளர் கலா. மனிதநேயமிக்க காவலர்களின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.