வராக் கடன் குறித்த விவாதம் ஏட்டுச்சுரைக்காய் போன்றது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களின் கடன் ரூ. 68,000 கோடியை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்தது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இது நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவின் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், 68,000 கோடி கடனை வங்கிகள் தள்ளுபடி செய்ததா, நிறுத்தி வைத்ததா என்பது ஏட்டுச்சுரைக்காய் விவாதம். இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி, மல்லையாதான். 3 பேரின் கடன்களை வாராக்கடன் என பேரேட்டில் எழுதி கடனை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கிவிடுக.கடனை வசூலிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட் செய்துள்ளார்.