Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி தகவல்…! சென்னையில் இன்று 2 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!

சென்னையில் தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 3 கர்ப்பிணிப் பெண்களும் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் தமிழகத்தில் 104 பேருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மொத்தமாக 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 922 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,210 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று 94 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 768 ஆக அதிகரித்துள்ளது. அதில் இதுவரை 210 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் இங்கு கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

மேலும், சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்பாக்கம் மற்றும் ஓமந்தூரார் ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் இதுவரை 560 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் அறிகுறிகளுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், 2 கர்ப்பிணிகளுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |